இரண்டு நாட்களுக்கு முன்பு சூரி எனது வீட்டிற்கு வந்திருந்தார். சில வருடங்களாக நாங்கள் சந்திக்கவே இல்லை. பேச்சின் போக்கில் சூரி சொன்னவைகள்.
2012 சினிமாவில் வருவது போல, ஒரு பெரிய பிரளயம் வந்து, தமிழ் நாடு மூழ்கிவிட்டால். 100 வருடங்களுக்கு பிறகு அகழ்வாராய்ச்சி மூலம் தோண்டி எடுக்கப்படும் கல்வெட்டுகளை பார்த்து உலகமே வியக்கும்.
எதனை தளபதிகள், 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள் என்று மலைத்து போய்விடுவார்கள். ஏனென்றால் அத்தனை அடைமொழிகள்...
வீரத் தளபதி
எங்கள் தளபதி
எழுச்சி தளபதி
புரட்சி தளபதி
விதவிதமான கலைஞர்கள்
புரட்சி கலைஞர்
கலைஞர்
இதில் புரட்சி தலைவர்கள் , சின்ன தளபதிகள், உலக நாயகன்கள்
ஐயோ ராமா .......
தன் சந்ததிகளுக்கு மட்டும் செய்துவிட்டு , நாடு மக்களுக்கு வெறும் கல் வேட்டை மிச்சம் வைக்கும் இந்த தலைவர்களையும் தளபதிகளையும் என்ன செய்ய?
புகழேந்தி சொல்வது போல்
"நாடும் நட்டு மக்களும் , நாசமாய் போகட்டும்"