Monday, December 5, 2011

பிறந்த வீடா... புகுந்த வீடா...

நான் பிறந்த வீட்டில் என்னை பற்றி பேசியவை....

அழகானவள்,
நல்ல பேசுறா,
அவ கண்ணுக்கே கொத்திகிட்டு போய்டுவானுங்க,
எத செஞ்சாலும் கரெக்டா செய்றா,
அவளுக்கு தெரியும்,
அவள மாறி வருமா?

நான் புகுந்த வீட்டில் என்னை பற்றி பேசியவை.....

கோண,
அதிகம் பேசுற,
கண்ண காட்டி மயக்குறா,
எதாவது கரெக்டா செய்ய தெரியுதா?,
ஒண்ணுமே தெரியல உனக்கு,
இவ என்னைக்கு மாறுவா?

எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா சொன்னது....

கன்னித் தமிழ் .........

சிலருக்கு அபாரமான வசனத் திறமை உண்டு, அதை கவிதையாக்கி இங்கே எழுதுகிறேன்... இவை என் சிந்தனை அல்ல.....

"உன்னை நினைத்த பொது - என்
கண்ணிலிருந்து வெளியேறியது நீர்,
ஏன் என்று கேட்டபோது - உன்
காதலனே காரணம் என்றது கண்ணீர்,
இத்தனை அன்புடன் அவனிருக்கும்போது - எனக்கு
உன் கண்ணில் வேலை எதற்கு......"



"உன் மூச்சு காற்றில் காதல் சொல்வாய் என,
என்னை தீண்டும் தென்றலிடம்,
தேடுகிறேன் உன் மூச்சு காற்றை....
காத்திருக்கிறேன் நான் உனக்காக,
கரம் சேரும் நாளுக்காக."



" இப்போதெல்லாம் இதய சுமை அதிகமாகிவிட்டது,
என்னவனே- உடற்ப்பயிர்ச்சி செய்....."




" உன் விழி பார்வையால், என் உதடுகளை பூட்டினாய்,
உன் இதழ் சேவையால் என் உயிர் பூட்டை திறந்தாய்,
நீ அருகே வரும்போது நெஞ்சத்தில் அலை அடிக்கும்,
நீ தேகம் தொடும்போது நெஞ்சத்தில் தீ பிடிக்கும்"




ஒரு பெண்ணின் உணர்வுகளாக எழுதப்பட்ட இவையாவும், நிச்சயமாக அவளுடைய சிந்தனைகள். நான் இல்லை.... நான் இல்லை...

Saturday, October 8, 2011

தென்றல் காலங்கள்....

என்ன செய்தேன் நான், எனக்கு எதற்கு இந்த வரம்?
நான் உனக்கு மட்டும் தான் என்று நீ சொல்கிறாய்,

புள்ளியை சுற்றும் கோலம் போல என் சிந்தை முழுதும் உன் நினைவு,
கற்குவியலில் முத்தை போல் நீ என் வாழ்க்கையில்,

சாவதில் சந்தோசமில்லை என்பேன் நான்,

சாவதற்கு தைரியம் வேண்டும் என்கிறாய் நீ,




சந்தேகபடுகிறாய் என்பேன் நான்,




செத்துபோயவேடுவேன் என்கிறாய் நீ,




பிறர் உன்னை புகழ்ந்தால் , இருப்பு கொள்ளவில்லை எனக்கு,




பிறர் புகழ இருக்கிறாள் என்னவள் என்றென்ன சொல்கிறாய் நீ,




இச் என்ற ஒலி தொலை பேசியில் வந்தால்,




பட்டென்று குளிருதடி எனக்கு,




உன் குரலில் என் பெயர் கேட்டால்,




உச்சத்தை தொடுகிரதடி உணர்வு,




முத்தத்தால் உன்னை குளிப்பாட்ட,




சத்தியம் செய்யுதடி மனது,




உனது திடீர் மௌனங்கள், என்னை பைத்தியம் ஆக்கிவிடுகிறது,




உனது கோபங்களை பார்த்தால் நீ பைத்தியம் என்று தோன்றுகிறது,




உண்மையா பொய்யோ நீ பைத்தியம் என்பது,




உன்மேல் நான் பைத்தியம் என்பது உர்ஜிதமாகிவிட்டது,




unnaal வாழ்க்கை இனிக்கிறது எனக்கு,




பக்கத்தில் நீ இருந்தால் பத்திகொள்ளும் காதல் நெருப்பு,




கைக்கோர்த்து நடக்க நான் விரும்புகிறேன்,




கட்டிக்கொண்டு உறங்க நீ விரும்புகிறாய்,




வா என்று நீ சொல்லும்போது, சந்தோசமாய் இருக்கிறது,




நான் வருகிறேன் என்று பிரியும் போது உள்ளம் வலிக்கிறது,






Thursday, May 5, 2011

ஜெனி மினி கவிதைகள்....

"யாரும் இல்லாத கடற்கரையில்,
நிற்கும் படகை போல் ;
உணர்ந்தேன்,
நீ என்னோடு இல்லாத ;
நாட்களை."

"உன்னை விட்டு;
பிரிய மனம் இல்லை எனக்கு,
அதனால் தான்;
நினைக்கும் போதெல்லாம்,
உன்னை தொட்டு செல்கிறேன்.
- விழிகளிடம்... இமைகள் சொல்லிய கவிதை ."

" உன் அன்பை உண்மையாக நேசிக்க,
பலபேர் இருக்கலாம்,
---ஆனால்
உன் அன்பை உயிராக சுவாசிக்க,
நான் மட்டுமே இருப்பேன்,
- எப்போதும்."

"சிலர் பிரிந்து போனால் ,
மனசு மறந்து போகும்;
-ஆனால்,
உன்னைப்போல் சிலர் மறந்து போனால்,
மனசு இறந்து போகும்."
- உன் நினைவுடன்...

"கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும், - என்
கண்கள் மூடும் வரை, உன் நினைவு நீடிக்கும்."






Wednesday, April 20, 2011

இரவு உலகம்......

"ஜொலிக்கும் கார் முன் விளக்கின் ஒளியில்,
திறக்கும் அந்த விடுதியின் முதல் கதவு;
இருக்கும் நமக்கு முன்னே வந்த ஊர்திகள்,
பார்ப்பவர் எல்லார்க்கும் சிவந்த விழிகள்;"

"குறைந்தது இருவர் , - குறைந்த
உடையில் பெண்கள்,
மயக்கும் குரல்கள்,
மங்கிய விளக்கில்;
இனிக்கும் மதுவின்,
இயல்பான வாடையில்,
ரசிக்கும் வகையில்,
தூரத்தில் இசை;"

"பின்னும் ஒருகதவு திறக்க,
ஓங்கிய இசை முகத்தில் அடிக்க,
லேசெர் ஒளியால் அரங்கம் நிறைய,
லேசாய் நம் மனம் பறக்க "

"பட்டும் படாமல் ஆடும் இளசுகள்,
தொட்டும் தொடாமல் ஆகும் உரசல்கள்,
உறக்கம் இல்லா உணர்வுகள் என்னும்
ஏக்கம் தணிக்கும் பாலை சோலைகள்;
பாட்டில்கள் பந்தாடி , மகிழ்விக்கும் கூத்தாடி,
புகைபோக்க காத்தாடி, குளிர்விக்க குளிரூட்டி,
அடக்க முடியவில்லை என்றால் அரை ரெடி;
மூச்சா அடிக்கும்மிடமும் கண்ணாடி,"

சிரிப்பும் , கும்மாளமும் சிறிது நேரம் தான் என்றெண்ணி,
களிப்பும் அலுத்துவிட, துடிக்கும் சிலர் உள்ளம்

நகைக்கும் உலகிற்கு, இங்கே நடப்பது ஓர் செய்தியே,
ஆனால் ........
இங்கே இருக்கும் மானிடர்க்கு, சொர்க்கம் வேறில்லையே...

Saturday, February 19, 2011

நடைமுறை....

பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று,
விபச்சாரி கூட அதிக பணம் கேட்கிறாள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்,
சில்க் ஸ்மிதா கதை திரைப்படமாகிறது.

குளிர் கால கூட்டத்தொடர் ,
குடும்பச்சுற்றுலா மந்திரிகளுக்கு.

கடல் அலையில் மஞ்சள் நுரை,
திருப்பூரில் கடல் இல்லையே.

வேஷம்போட தெரியவில்லை எனக்கு,
என் நண்பர்கள் எல்லாம் முகமூடி வைத்திருக்கிறார்கள்.




Thursday, February 17, 2011

பைத்தியக்கார உலகம்.....

சில சமயம் தோன்றுவதை எல்லாம் எழுத முடியாது. எழுதினால் இப்படித்தான்........

கடையேழு வள்ளல்களுக்கு சிலைவைக்க வேண்டும்
- பிச்சைக்காரர்கள் உண்ணாவிரதம்,
பறவைகள் போடும் எச்சம் எல்லாம், தரை மீது;
- புள்ளியிட்டு மறந்த கோலம்,
ஒட்டு துணியில்லாமல் இருப்பவனை , அம்மனச்சாமியார்
- தீர்காயுசாய் இரு என்று வாழ்த்தினார்,
கருப்பு பெண்களுக்கெல்லாம் கல்யானமாகிவிட்டதால்,
- சிவந்த பெண்கள் முகத்தில் கரி,
பிறந்த பெண்குழந்தை முத்தமிட்டால் , பிறவி மோட்சம் ;
- கிடைக்கும் உனக்கு,
கள்ளி பாலுக்கும் , கதிர் நெல்லுக்கும் வேறு வேலை தேடி,
- விஞ்ஞானிகள் ஆராய்ச்சி,
தனயன் மகனை, தன மகனாய் நினைத்தவன், தங்கை மகனை;
- கொலை செய்தது மகளுக்காக,
மகள் செத்துவிட்டதும் அவனுக்கு பைத்தியம் என்றனர்,
- ஓடிப்போனது தெரியாதவர்,
அவள் அரும்பு , அவன் உடும்பு, கையில்
- ரோஜாப்பூ;
என்னை விரும்பு, பின் விருந்து; பால் அறுந்து,
- முத்தாய்ப்பு;
உன் உடம்பு, என்னில் அடங்கு; நாம் இணைந்து,
- ஒரே அரிப்பு;
நாம் இணைந்து, தூரம் நடந்து; உயிர் வாழ்ந்து,
- சொறி சிரங்கு;
கருங்குரங்கு , நீ இறங்கு, பல மடங்கு,
- ரொம்ப சலிப்பு;
விபச்சாரம் செய்ததாக பதிமூன்று வயது சிறுமி,
- கைது என்றது தினசரி;
அமெரிக்க போலி பல்கலைக்கழகதிர்க்கும், நித்யானந்த
- சாமிக்கும் தொடர்பு எனச்சந்தேகம்;
தமிழை பாடமொழியாக கொண்ட மாணவருக்கு இருநூறு ரூபாய்
- தமிழக அரசு அறிவிப்பு;
வாகனம் நிறுத்த இடம் வேண்டி , விமானநிலையத்தில் ,
- கழிப்பறைகள் இடிக்கப்பட்டன;
பாடுபச்ச என்று புதிய போதை பொருள் , கிராம் ஐந்தாயிரம்,
- ஏழு நாள் போதைக்கு இது போதும்;
வாசனை சொக்ஸ் ( காலுறை ) விற்பனை, நாற்றத்திலிருந்து
- விடுபடுங்கள் அறுபது ரூபாயில் ;
சில்லறை இல்லை என்றவன் சட்டைப்பையில்,
- எதுவுமே இல்லை;
காந்தியின் சத்திய சோதனை,
- முப்பது ரூபாய் தான் ;
ஜோடிப்பொருத்தம் அருமை என்றனர்,
அண்ணன் தங்கை என அறியாதவர்;
காதலர் தினத்தில் கையில் தாலியுடன் ,
- அலைந்தது காதலர் இல்லை;
அரசாங்க அலுவலர்க்கு பத்து பை வைத்த கால் சட்டை வேண்டுமென,
- எல்லோரும் வேலை நிறுத்தம்;
சிலுவை இயேசுவின் கோவணம்,
- சித்திரக்காரனின் கருணை;
புல்லாங்குழல் மூலம் கஞ்சா பிடிக்க முடியும்,
- புதிய கண்டுபிடிப்பு.

மேலே உள்ளவற்றில் வரிகள் மாறி மாறி உள்ளது புரிந்தால் நீங்கள் புத்திசாலி ....

Wednesday, February 16, 2011

எதனாலே எதனாலே ?? ??

நான் என்னுடைய அப்பாவை கோயம்பேடு வரை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை கிண்டியிலிருந்து கோயம்பேடு செல்வது கடினம். நங்கள் கிளம்பியது எட்டரை மணிக்குதான். இந்தியன் ஆயில் பங்கில் இருநூறு ரூபாய்க்கு மூன்று லிட்டர் பெட்ரோல் அடித்துவிட்டு கெளம்பினோம். நாளை விடுமுறை என்பதால் பயணிப்பது கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அசோக் நகர் இரண்டாவது சிக்னல் கடக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதன் பின் வாகன போக்கு வரத்தின் வேகம் சற்று கம்மியாக இருந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக கட்டப்பட்டுவரும் பாலங்களால் இந்த வேக மாற்றம் இருக்கலாம் என்று நினைத்தேன். ஊர்தே சில நிமிடங்கள் சென்றபின் தான் தெரிந்தது , ஸ்ரீ வசந்த பவன் என்னும் ஹோடேலின் வாசலில் நிற்கும் தண்ணீர் வண்டியால் தான் போக்குவரத்தில் நெரிசல் என்று.



இன்று காலை எழுந்ததே ஒரு போன் அழைப்பினால் தான். ஹோட்டல் வியாபாரம் என்பது சாதாரண விஷயம் அல்ல. இரவு ஒரு மணி ஆகிவிடும் வேலை முடிய. காலை மூன்று மணிக்கெல்லாம் வேலை தொடங்கிவிடும். ஐந்தரை மணிக்கு காபி கிடைக்காவிட்டால் ஹோட்டல் நடத்துவதில் அர்த்தமே இல்லை. பொதுவாக ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை சூடு பிடிக்கும் வியாபாரம்அதற்குப்பின் சாதாரணமாகவே இருக்கும். மாலை ஆறிலிருந்து பத்து வரை மீண்டும் வியாபாரம் நன்றாக இருக்கும். ஐந்து மணிக்கு டீ மாஸ்டர் போன் செய்தான். இரவு காட்சியாக யுத்தம் செய் படத்தை பார்த்துவிட்டு வந்ததால், கண்கள் கெஞ்சின. பால் வரவில்லை என்று மாஸ்டர் சொன்னதும் உயிர்பயம் வந்து விட்டது. அடுத்த நிமிடம் தூக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது. நான் பலருக்கு போன் செய்து பத்து லிட்டர் பால் கிடைக்கும் படி செய்த பின்பு தான் பல்லை விளக்கினேன். இன்று நல்ல வியாபாரம் எந்த குறையும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே நிரஞ்சன் தண்ணீர் இல்லை என்றான். நேற்றே தண்ணீர் சொல்லிஆகிவிட்டதே என்று நான் கேட்ட போது. தண்ணீரின் விலை நூறு ருபாய் அதிகமாகிவிட்டது என்று கெட்டவனை நாளைக்கு பேசலாம் என்று அனுப்பியது நியாபகம் வந்தது. உடனே அவனுக்கு போன் செய்து வரச்சொல்லி அவன் வர எட்டு மணியானது. அவனிடம் மத்தியஸ்தம் பேசி தண்ணீர் இறக்கிக்கொண்டிருக்கும் பொது. போக்குவரத்து காவலர் ஒருவர் வந்தார். தண்ணீர் வண்டி வாசலிலேயே நிர்ப்பதால் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. காவலரை பார்த்த உடன் என்ன சொல்வது என்றே புரியவில்லை. வந்தவர் நேராக என்னிடம் வந்து , எஸ் ஐ ரெண்டு தோசை வாங்கிட்டு வரச்சொன்னார் என்றார். நான் ஒடனே கடையின் உள்ளே நோக்கி சத்தமாக " சார் க்கு ரெண்டு ரோஸ்ட் பார்சல் " என்று சொல்லிவிட்டு, காபி சாப்டுங்க சார் என்றேன்.



எனக்குன் ஒன்னு தான் புரியவில்லை. நம்ம மொதலாளி கொடுக்குற சம்பளம் , நாம செய்ற வேலைக்கு கரெக்ட் தானான்னு. நைட் ரெண்டரை ஆயிடுச்சு தூங்குறதுக்கு , காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கடைய சுத்தம் பண்ணிட்டு பால் வரும்னு பாத்தா , வரல . என்ன செய்றது, மாஸ்டர் கிட்ட சொல்லி மொதலாளி கிட்ட போன் பண்ண சொன்னேன். ஏழு மனைக்கு வந்த மொதலாளி வந்த ஒடனே என்ன தான் திட்டினார். சொன்னாலும் திட்டு , சொல்லாட்டினாலும் திட்டு. தண்ணி இல்லைன்னு தெரிஞ்ச ஒடனே சொன்னேன். அதுக்கு போய் திட்டுறாரு.; சரியான லூசு. இல்லனா இல்லன்னு தானே சொல்லமுடியும். நாளைக்கு எந்தனபேறு தின்ன வருவான்னு இன்னைக்கு சொல்லமுடியுமா? நைட் போவும் பொது நூறு ரூபா கொடுத்து, ரெண்டு சீப்பு பழம் வாங்கிட்டு வர சொன்னார். நல்ல மல வாழப்பழம் கிடச்சுது. சீப்பு முப்பது ரூபாய்னு சோனான். ரெண்டு சீப்பு வாங்கிட்டு போய் மொதலாளிகிட்ட கொடுத்தேன். கூடவே முப்பது ருபாய் மிச்சமுனு சொல்லி கொடுத்தேன். பத்து ருபாய் கைல கொடுத்தார். கடையோட மாடில என்னோட பெட்டிக்குள்ள , இந்த இருபது ரூபாயையும் செத்து ரெண்டாயிரத்தி நாப்பது ருபாய் இருக்கு. ஒரு கிராம் தங்கம் மூவாயிரம் ரூபாயாம்ல?

இந்த கதை புரிகிறதா?........

Tuesday, February 15, 2011

மீண்டும் எஸ் எம் எஸ் கவிதைகள்.....

சத்தியமாக இந்த கவிதைகளை நான் எழுதவில்லை........

" சிப்பிக்குள் நுழைந்த சிறு தூசி ,
முத்தாக மாறுகிறது;
என்னவாக மாற நீ ,
எனக்குள் நுழைந்தாய்? "


" இரவில் நீ ,
தினமும் காணும்;
நிலவை போன்றது எனது எஸ் எம் எஸ்;
ஆனால் .......
நீ பதில் எஸ் எம் எஸ் அனுப்பும் நாள்,
எனக்கு பௌர்ணமி."

" பறவைகள் , ஒருமுறை கட்டிய கூட்டில்,
மறுமுறை முட்டையிடுவதில்லை;
மனிதன்,
தாத்தா கட்டிய வீட்டிற்கெல்லாம் ;
வாடகை வசூல் செய்கிறான்."


"சாவுக்கும் தூக்கத்துக்கும்,
ஒரே ஒரு வித்தியாசம் தான்;
தூங்கினால் கனவு வரும்,
செத்தால் தான் நிம்மதி வரும்."

நல்லா இருந்தா கமெண்ட் எழுதுங்க,
நல்ல இல்லைனா திட்டி எஸ் எம் எஸ் அனுப்புங்க......
அதையும் இங்கே எழுதுவேன்.

Wednesday, January 26, 2011

பானம்.....

அந்த வீடியோ வை பார்க்கும் போதெல்லாம், பாலனின் உடல் சிலிர்த்தது. தலையில் முண்டாசு அணிந்த அந்த உருவம், தொழிற்ச்சாலையின் பிரதான சேமிப்பு தொட்டியின் ஏணி மேல் ஏறி அந்த உருவம், கையில் இருந்த குடுவையில் இருந்த எதோ ஒரு திரவத்தை சேமிப்பு தொடியினுள் கொட்டிவிட்டு, கிழே இறங்கி சற்றே நொண்டியபடி நடந்து சென்றது. உருவம் என்று சொல்வானேன் யாரோ ஒரு ஆண்.

டிப்ளோமோ படித்துவிட்டு சர்வீஸ் எஞ்சினியர் பதவியில் இருந்து படிப்படியாக முன்னேறி, இன்று இந்த பன்னாட்டு குளிபான கம்பெனி யில் தயாரிப்பு நிர்வாகி என்ற பதிவிக்கு வர, பாலன் செய்து கொண்ட சமரசங்களும், சகித்துக்கொண்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. அத்தனையும் இரண்டு நாள் விடுப்பு எடுத்ததால் வீணாய் போய்விடுமோ என்ற அச்சம் பாலன் நெஞ்சில் வந்து விட்டது.

சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக சரக்கு தேவை என்பதால், போகி அன்று கூட தயரிப்பு வேலைகளை செய்யப்போவதாக முடிவு செய்த பின்,
பாலனின் மனைவி சீதா, கட்டாயப்படுத்தியதால் இரண்டு நாள் மேலிடத்தில் சொல்லிக்கொள்ளாமல் விடுப்பில் வீடு சென்றதால் வந்த வினை இந்த வீடியோ.

மொத்த குளிர்பானமும் சந்தைக்கு சென்றுவிட்டது. சரக்கை திரும்பபெருவது என்பது இயலாத காரியம். விடுப்பில் இருந்த இரண்டு நாள்களும் வேலை எவ்வாறு நடந்தது என்று பார்ப்பதற்காக தானியங்கி வீடியோ கேமரா பதிவுகளை பார்த்தபொழுது பாலன் மிரண்டு போனார். போகிப்பண்டிகையின் முதல் நாள் தயாரிப்பை சேமிப்பு தொட்டியில் வைத்துவிட்டு, போகியன்று குடுவைகளில் அடைத்து சந்தைக்கு அனுப்பசொல்லிவிட்டு, பாலன் வீட்டிற்கு சென்றார்.

அடுத்த மூன்று நாட்களும், பாலனின் கண்கள் போனை விட்டு அகலவில்லை, எந்த நிமிடம் விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து அழைப்பு வருமோ? மேலிடத்தில் தெரிந்து வேறு பிரச்சனைகள் வருமோ? என்று பாலன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். இணையம் மூலம் வேலைவாய்ப்பு தளங்களை பார்த்து, தனது தகுதிக்கு வேறு எங்காவது வேலை கிடைக்குமா என்றும் பார்த்தார். எதிர்ப்பார்த்தபடியே மேலிடத்தில் இருந்து பொன் முலம் தகவல் வந்தது. ஆனால் அவர் எதிர்ப்பார்க்காத தகவல் அது.

குறிப்பிட்ட நாளின் தயாரிப்பு, அதிவேகத்தில் விற்பனை ஆகுவதகவும், அந்த நாளின் தயாரிப்புமுறைகளை சரிபார்த்து அதையே நடைமுறை படுத்தும்படியும், மண்டல தலைவர் பாலனை கேட்டுக்கொண்டார். பாலனின் நிலை மேலும் சிக்கலானது. ஏன் என்றால், அந்த குறிப்பிட்ட நாள் போகிப்பண்டிகைக்கு முந்தய நாள்.

தரக்கட்டுப்பாடு துறைக்கு தகவல் சொன்னவுடன், அந்த குறிப்பிட்ட நாளின் தயாரிப்பில் நைட்ரோஜன் உப்புக்களின் அளவு சற்றே அதிகமாக இருந்ததாகவும், உபயோகமானதை தவிர மிச்சமாக சில குடுவைகள் அவர்களிடம் உள்ளதாகவும், வேண்டுமானால் மீண்டும் பரிசோதித்து பார்க்கலாமா என்றும் கேட்டார்கள். பாலன் பரிசோதனைகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மிச்சமான குடுவைகளில் சிலவற்றை எடுத்துவர ஆள் அனுப்பினார்.

கிடைத்தவற்றில் ஒன்றை எடுத்து, சிறிதளவு குடித்துப்பார்த்தார். தொண்டையை விட்டு இறங்கிய பின் நாக்கில் மிச்சமிருக்கும் சுவை புதிதாகவும் தனக்கு மிகவும் பரிச்சயமான வேறு ஒரு பானத்தின் ருசியாகவும் இருந்ததை கண்டுபிடித்தார். ஒரு நிம்மதி பெருமூச்சு பாலனிடமிருந்து வந்தது.

பாலனுடைய தாத்தா பாலனுக்கு கற்றுகொடுத்த பழக்கம் அது. பாலனுக்கு அந்த பழக்கத்தை விடமுடியவில்லை. அவனுக்கு இந்த பழக்கம் இருப்பது, கம்பெனி வாட்ச் மனுக்கு அவரது வீட்டில் சில எடுபிடி வேலை செய்யும் போது தெரிந்து விட்டது. பதினைந்து தினங்களுக்கு முன் அவன் இரவு வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்ததை தானியங்கி வீடியோ கமெராவில் தெரிந்து கொண்டு பாலன் திட்டினார். அதனால் தான், அவன் சேமிப்புத்தொட்டியில் இனம் தெரியாத திரவத்தை கலந்துவிட்டன.
விஷயத்தை புரிந்துகொண்ட பாலன் திருடனுக்கு தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டார். பாலனுக்கு இருந்த பழக்கம் , தன சிறுநீரை தானே குடிப்பது. வாட்ச் மென் , சேமிப்பு தொட்டில் கலந்தது , அவன் சிறுநீரை......