Monday, July 1, 2013

"கழிவறை காவியம் " - 1

அன்பு நண்பர்களே ,

கூகிள் மூலமாக தான் நான் எழுதுகிறேன், எழுத்து பிழைகள் எல்லாம் என்னுடைய அலட்சியத்தால் மட்டுமே வருவது..   :) சரியா,

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், என்னுடைய வேலை பல ஊர்களுக்கு  சென்று வரும் வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நான் கண்டவைகளை எழுதவே இந்த வலை தளம்.

 யாராலும் தவிர்க்க முடியாத, அதே சமயத்தில் அதிகம் பகிர்ந்துகொள்ளப்படாத , நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ஒரு உலகம் தான் கழிவறை. கழிவறையை நேசிக்கிறேன் என்று சொல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு, புதிய சிந்தனை வருவது கழிவறையில் தான் என்று ஊர் கேட்க சொல்லுவார்கள். நான் அடுத்த அடி எடுத்து வைக்கிறேன், நான் சந்தித்த கழிவறைகள், அங்கே எனக்கு தோன்றிய சிந்தனைகள், இன்னும் பல விஷயங்களை எழுதலாம் என்று நெடுநாளாய்  என்னுள்ளே  ஒரு எண்ணம். அதுவென் இங்கே நான் எழுத தொடங்கும் "கழிவறை காவியம் " 

அந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதே ஒரு இன்பம் தான்.

கழிவறை என்பது உன்னை நீயே பூட்டிக்கொள்ளும் சிறை 
உடல் கழிவுகளை மட்டும் அல்ல.. உள்ள கரைகளையும் கழித்துவிட கூடும்,
சிறந்த தனிமை என்பது காட்டில் கூட  கிடைக்காது... கழிவறையில் கிடைக்கும்,
கழிவறைக்குள் இருக்கும் கண்ணாடி தான் உன் மனசாட்சி.........

முடிந்த வரையில் எதையும் மறைக்காமல் எழுத முயற்சிக்கிறேன்....