என்று தணியும் உங்கள் மருத்துவ தாகம்?
என்று மடியும் உங்கள் பணமீட்டும் மோகம்?
முதலில் மருத்துவ படிப்பு தான் சிறந்தது என சொல்வதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும்
மருத்துவர்கள் இரண்டு வகைப்படுவர்
1. அரசாங்க வேலை செய்துகொண்டு ஓய்வு நேரத்தில், சொந்த சிறு குறு தொழிலாக, சிகிசையகம் அமைத்து மருத்துவ பயிற்சி செய்வது.( மொள்ளமாரித்தனம்)
2. தனியார் நிறுவன வேலை அல்லது சொந்தத் தொழில், அதாவது பெருமுதலாளிகளின் கைக்கூலி அல்லது தானே முதலாளியாக தொழில் செய்வது. ( முடிச்சவுக்கித்தனம்)
ஆக இவர்கள் யாரும் சேவை செய்வதில்லை.
மருத்துவ படிப்பு படிக்க அதீத அறிவு தேவை இல்லை என மருத்துவர்கள் ஒத்துக்கொள்கிற சூழ்நிலை தான்.
இங்கே எல்லாருக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என ஆசை.. காரணம்....
வேற என்ன? காசு தான்...
அரசாங்க மருத்துவருக்கு சம்பளம் அப்புறம்... சொந்த சிகிசையகம் மூலம் ஈட்டும் பணம், மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்கள் தரும் தரகு ( கமிஷன்). என திசையெங்கும் கொட்டிக்கிடக்கும் செல்வம்.
தனியார் மைத்துவமனையில் வேலை செய்தால்... சம்பளம், ஊக்கத் தொகை, தரகு, சிறப்புச் சலுகைகள்.. மேற்படி, உருப்படி என ஏகப்பட்ட வழிகளில் கல்லா கட்டலாம். அதுவே மருத்துவமனை முதலாளியாக இருந்தால் கொள்ளை லாபம்.
மேற்சொன்ன அனைத்தில் பாதி, சட்டத்திற்கு புறம்பானது மீதி, நற்சமுதாயத்துக்கு எதிரானது.
மருத்துவத்துறை இவ்வாறு ஆகிப்போணதற்கு காரணம், அதிபுத்திசாலிகளை கண்டெடுத்த நுழைவுத்தேர்வு தான்.
எல்லாத் தொழிலும் லாபம் தர வேண்டுமெனில் .. நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்க வெண்டும்.
எல்லாரும் நலமுடன் வாழ வேண்டுமெனில், எல்லாத் தொழிலும் லாபம் தரவேண்டும்.
இல்லையேல் மருத்துவ தொழில் மட்டுமே இங்கே செழித்தோங்கும்.
முதலில் மருத்துவர்கள் அநியாயமாக பணம் சம்பாதிக்கும் வழிகளை அடைக்க வெண்டும்.
பிற தொழில்கள் நலிவடையாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்.
தனித்திறமைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும், உதவியும் செய்ய வெண்டும்.
மருத்துவக் கனவு என்பது பணத்தாசையே என அனைவரும் உணரவேண்டும்.
ஒரு லட்சம் கட்டி நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவன், பல கோடி சம்பாதித்தாலும் போதும் என்று நினைக்க மாட்டான்.. நினைக்கவும் முடியாது..
மருத்துவர் தின வாழ்த்துக்கள் 😂😂😂😂