எனக்கு வந்த .... அல்லது யாரோ.... யாருக்காகவோ வரைந்த குறுஞ் செய்திகள்
"பூக்கள் இல்லாததால்!
நகரத்தில்;
வண்ணச் சட்டைகளை,
வட்டமிடுகிறது;
பட்டாம்பூச்சி."
அடுத்தது...
"உன் உள்ளம் நேசிப்பதை நீ மறந்துவிடலாம் ;
ஆனால் ,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்;
உன்னால் மறக்க முடியாது."
இது உண்மையா என்ன?
அடுத்தது....
நீ ஒளித்து வைத்திருந்தவைகளை;
எனக்குக் காட்டி,
அவை உனக்குத்தான் சொந்தம் என்றாய்.
என் இதயத்தை காணவில்லையே ,
அதை நீ ஏன் மறைத்தாய்?
இதற்கு என்ன அர்த்தம் ???? என்னத்த பாத்தாங்க? எத காட்டுனாங்க?
"குற்ற உணர்வு என்னை கொல்லுதடி தோழி,
காய்த்த மரமென்று உன் மேல்
கல் எறிகிறார் கயவர் ,
சோற்றில் உப்பிடவில்லை உன்னை ,
சொன்ன சொல் கேட்டு,
காட்டில் விட்டேனே உன் கண்ணை கட்டிவிட்டு."
இது நல்லா இருக்கா?
இதுபோல பல கவிதைகளை நான் அனுப்பும் பொது பதில் தருவது வெகுசிலரே. அந்த பதில்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதற்கு என் நண்பன் புகழேந்தி அனுப்பிய ஒரு எஸ் எம் எஸ் ஐ எடுத்துகாட்டாக இங்கே தருகிறேன்
"எதுகை மோனை ,
எதுக்குடா கேனை ;
குருன் தகவல் அனுப்பி,
கொலை செய்கிறாய் என்னை .... "