Monday, August 17, 2009

புனே மழை...... தொல்லை ....

சற்று சிந்தித்து பாருங்கள், கொளுத்தும் வெயிலானாலும் வேலை செய்யலாம், ஆனால், அறை மணிநேர மழையினால் எல்லா வேலையும் கெட்டுவிடும். இப்படித்தான் நான் ஒருமுறை புனே செல்ல நேரிட்டது.

எனது சக தொழிலாளி அலி முகமது ஒரு ஆய்வுக்காக முன்னமே சென்றுவிட்டான். அது வடக்கே எனது முதல் பயணம். ஒரு நண்பனை போல மழை கூடவே வந்தது. மும்பை செல்லும் அந்த இரயில் ஒரு நாளின் நள்ளிரவுக்கும், விடியற்காலைகும் இடைப்பட்ட ஒரு நேரத்தில் புனே வந்தடைந்தது. புனேவில் நான் அறிந்தது அலி முகமதின் செல் பேசி நம்பர் மட்டுமே. கூப்பிட்டால் பதிலே இல்லை. எனக்கும் வயிற்றை ஏதோ செய்ய ஆரம்பித்து விட்டது காரணம், பயம் அல்ல வேறு எதுவோ....... ச்சே பசி..... ( நேற்று இரவு சாப்பிடவில்லை ).

நடை மேடையில் இருந்து வெளியே வருவதற்குள், ப்ளட் பார மூலைகளின் எச்சில் நாற்றமும், வடகிந்தியர்களின் சட்டை நாற்றமும் பழகிவிட்டது. இரயில் நிலையத்தின் எதிரில் இருந்த ஒரு ஹொட்டேலில் பசியாறலாம் என்று சென்றேன். மெனு கார்டில் இருந்த உணவுவகைகளில் தெரிந்தது ஒன்றே ஒன்று தான், sandwitch. சிக்கன் sandwitch ஆர்டர் செய்தேன். அருகில் அமர்த்திருந்த ஒருவரும் பரிட்சியமானவர்களாக இல்லை, அனைவரும் பயணிகளே. சிக்கன் sandwitch வந்தது, வேகவைத்த கோழியை இரண்டு ரொட்டி துண்டுகளுக்கு இடையில் வைத்து, குறுக்கே வெட்டி தருகிறார்கள். பச்சை கறியை தின்பது போல் இருந்தது. பனி புயலில் மாட்டிக்கொண்ட சிலர், சக பிரயாணிகளை தின்றதாக கேள்விப்பட்டது உண்மையாக இருக்கலாம்.

ஒரு மணிநேரத்திற்கு பின் அலி முகமது செல் பேசினான்...............................

புனேயின் புறநகர் மிகவும் அமைதியானது. அழகானதும் கூட. ஒதுக்குபுறமான அந்த லாட்ஜ் இன் முதல் தளம், அலி முகமது கதவை திறந்ததுடன், திரும்பி போய் படுத்துவிட்டான். புதிய இடம், காலை கடன்களை முடித்து, காபி சாப்பிட்ட பின்..........

Thursday, August 6, 2009

பிறந்தநாள் பரிசு........

2003 முதல் எவேர்க்ரீன் குடும்பத்தில் நான் இணைந்து விட்டேன். எவேர்க்ரீன் நான் வேலை செய்யும் கம்பெனி. இன்று வரை நான் செய்த பயணங்கள் எல்லாம் இந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் தான்.
ஒரு நவம்பர் மாதத்தில் தான் நான் பிறந்தேன், என் உடன்பணியாளர் ஒருவருக்கும் எனக்கும் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம். எனக்கு இருபத்தி மூன்று, அவருக்கு இருபத்தி நான்கு.

நவம்பர் மாத இரவுகள் நீளமானவை, இருபத்தி இரண்டாம் தேதி இரவு மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் இரயிலில் நானும் எனது நண்பரும் ( ஏற்கனவே அறிமுகப்டுதிவிட்டேன்) பயணிப்பதாக முடிவாகி விட்டது. பிறந்தநாள் கொண்டாட்டங்களை அன்று மாலையே முடித்துவிட்டு இரயில் ஏறினோம்.

எனது நண்பருக்கு சைடு அப்பேர் பெர்த், எனக்கு அப்பேர் பெர்த். இரயிலின் உள்ளே நுழைந்த உடன் இருக்கைகளை சரிபார்த்து சுமைகளை இறக்கினோம். இரயில் புறப்பட்டது.

சைடு லோவேர் பெர்த்தில் ஒருவர் துண்டை விரித்து தூங்கிகொண்டிருந்தார் . எனது நண்பர், அவரை எழுப்பி "சார் உக்கந்துகலாமா " என்று கேட்டார். அவரோ "நான் படுக்கிறதுக்கு தான் சீட் வாங்கி இருக்கேன்" என்றார்.

எனது நண்பர் மிகவும் பொறுமையானவர். துண்டை விரித்து துங்கியவரிடம்" சார், கொஞ்ச நேரம் ஆகட்டும், ttr வந்ததுக்கு பின்னாடி நீங்க தூங்கலாம், அதுவரை நான் இங்கே உட்காருகிறேன் என்று சொன்னதோடு நிற்காமல் அவர் காலை தொடும்படி உட்கார்ந்தார். உடனே ஜன்னல் புறமாக அவர் திரும்பி படுத்தார். கால் இன்னமும் எனது நண்பரை தொட்டபடியே இருந்தது.
பொறுமை இழந்த எனது நண்பர், " கால கொஞ்சம் நவுத்துறது " என்று உரக்கவே சொன்னார். துண்டை விரித்து தூங்கியவர் நிச்சயமாக ஒரு செவிடாக இருக்கவேண்டும், கால் ஒரு இன்ச் கூட நகர வில்லை. எரிச்சலான என்னுடைய நண்பர், இரண்டாம் தர வார்த்தைகளை உபயோகப்படுத்தி யாரையோ திட்டுவது போல திட்ட ஆரம்பித்தார். ஆந்திர எல்லையின் ஒரு கிராமத்தை சேர்ந்த என்னுடைய நண்பர், நகர வாழ்க்கை வாழ்ந்தாலும், கிராமத்தை மறக்கவில்லை என்பது அவரது வசை சொற்களின் வீச்சில் புரிந்தது. ஆனாலும் கால் இன்னமும் நகரவேஇல்லை. வெறுத்து போன என் நண்பர், விருட் என்று எழுந்து என் அருகில் வந்து அமர்ந்து விட்டார். மறுநாள் எனக்கு பிறந்த நாள்.

ttr வந்தார், நேரம் கடந்துகொண்டே இருந்தது. முன் இரவின் பனிகாற்று இரயில் ஜான்னல்களுக்குள்நுழைய தொடங்கியது. சைடு லோவேர் பெர்த் காரன் ஜன்னல்களை அடைத்து, தூங்க தொடங்கினான். ஒரு ஜோடி கண்கள் அவன் சுக ஜீவியத்தை வெறுப்புடன் பார்த்துகொண்டிருந்தது.

மிகவும் மோசமான ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது. "என்ன சத்தம்" என்று எனது நண்பரிடம் கேட்டேன், "அந்த சொட்டை குறட்டை விடுகிறான்" என்றார் ( சைடு லோவேர் பெர்த் காரன் முழு சொட்டை) எனது நண்பர் ஏனோ தூங்கவில்லை.

பதினொன்று ஐம்பத்தி ஐந்து, எனது செல்பேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல அழைத்தார்கள் என் அம்மா. நான் தனியாக பேசலாம் என்று சற்றே தள்ளி toilet அருகில் சென்றேன். எனது நண்பர் என்னை கடந்து toilet உள்ளே சென்றார். அவர் உள்ளே இருக்கும்போது வெளியே சொட்டை " யார் ஜன்னலை திறந்தது ?" என்று சத்தம் போட்டான். யார் செய்திருப்பார் என்று எனக்கு புரிந்துவிட்டது. ஜன்னலை சாத்திவிட்டு சொட்டை மறுபடியும் தூங்க தொடங்கினான்.

ஒரு இருபத்தி ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ஒரு முப்பது வயது ஆடவனை தாங்கிபிடித்தபடி toilet நோக்கி வந்தாள். வெஸ்டர்ன் toilet உள்ளே முதலில் சென்ற அவள், போன வேகத்தில் திரும்பி வந்தாள். கைத்தாங்கலாக அந்த ஆடவனை (கணவனாக இருக்க வேண்டும் ) தூக்கியபடி toilet உள்ளே சென்றாள். வெளியே தனியாக வந்து கதவை அடைத்தாள். கைகளை கட்டியபடியே என்னை பார்த்து சிநேகமாக சிரித்தாள். " என்ன ஆச்சு? என்று கேட்டேன். " என் husband தான், சின்ன வயசுல drug addict. paralytic அட்டாக் வந்து, இந்த மாறி ஆயிட்டார்" என்றாள். toilet கதவை தட்டும் சத்தம் கேட்டு அவள் கதவை திறந்து, அவளது கணவனை அழைத்து சென்றாள்.

மீண்டும் சொட்டை காட்டுகத்தலாக கத்திகொண்டிருந்தான், யாரோ ஜன்னலை மறுபடியும் திறந்துவிட்டர்களாம். நான் எனது upper பெர்த் நோக்கி சென்றேன். எனது நண்பரின் பெர்த்தை பார்த்தேன், அவர் என்னை பார்த்து சிரித்தார்... அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சொட்டை இந்த முறை கொச்சை வார்த்தைகளால் திட்டிவிட்டு ஜன்னலை அடைத்து தூங்கினான். நான் படுத்த உடன் என் கண்முன் அந்த drug addict இன் மனைவி நியாபகத்தில் வந்தாள்.

கட்டிய பாவத்தால், கக்கூஸ் வரை கூடவருகிறாள் ஒரு மனைவி, அவன் இளவயதில் செய்த செயல்களால் அவன் மனைவி கஷ்டபடுகிறாள். நம்மால் யாரும் கஷ்டப்படகூடாது. இனி எந்தகாலத்திலும் drug என்கிற வார்த்தை என் வாழ்கையில் இல்லை என உறுதிஎடுத்தேன். தூங்கலாம் என்று நினைத்த பொது, மறுபடியும் சொட்டை கத்தினான். நான் எழுந்து என்னவென்று பார்த்தேன். ஜன்னல் மறுபடியும் திறந்திருந்தது. எனது நண்பர் செவிடன் போல் கண்ணை மூடி படுத்திருந்தார்.

சொட்டை இனிமேல் தூங்கமாட்டான் ...........

என் நண்பர் இனிமேல் நிம்மதியாக தூங்குவார்.......

இங்கே சிலர் கஷ்டபடுகிறார்கள், ஆனால் அதற்கு காரணம் அவர்களே தான்.....

Wednesday, August 5, 2009

முதல் பயணம் ...

எந்த ஒரு ஆரம்பமும் மிகவும் அற்பமானது தான், ஏனென்றால் இதுவே தொடக்கம் என்பதை அறியும் ஆற்றல் நம்மிடம் இல்லை.
இப்படித்தான் நானும் ஒருநாள் எனது பயணத்தை தொடங்கினேன். அது தஞ்சை இரயில் நிலையம். எனது தாயும் மற்றும் சில ,முக்கியமானவர்களும் வழியனுப்ப, ஒரு சுபயோக தினத்தில் பெங்களூரை நோக்கி எனது முதல் பயணம் தொடங்கியது. மிகபெரிய மாற்றத்தை எதிர்பார்த்து தொடங்கிய அந்த பயணத்தில், ஜன்னல் வழி காட்சிகளின் மாற்றத்தை ரசித்துக்கொண்டு, இந்த பயணத்தினால் நான் சாதிக்கபோகும் விஷயங்களை குறித்த கனவுகளையும், நான் பயணிக்க காரணமானவர்களை குறித்த நினைவுகளையும், அசைபோட்டுகொண்டிருந்தேன்.

ஒரு பயணத்தால் என்னவெல்லாம் மாறிவிடும்? நேரமும் இடமும் மட்டுமே என்று இப்போது புரிகிறது. ஆனால் அன்று அந்த பயணம் என் வாழ்கையையே மாற்றிவிடும் என்று நம்பினேன். chemical இன்ஜினியரிங் ஒரு தேவாம்சமான படிப்பல்லவா? வா, வா, காத்திருக்கிறது வேலை என்று எல்லோரும் கூபிடுகிறார்கள் அல்லவா, "நமக்கு இந்த சென்னை வெண்ணை எல்லாம் சரிப்பட்டுவராது நேரா பெங்களூர் தான்" என்ற நினைபோடு, கட்டு பெட்டியை என்று கெளம்பிவிட்டேன்

பெங்களூரில் எனக்கு ஒரு மாமா உண்டு. வேலை கிடைக்கும் வரை அவர் வீட்டில் ஜாகை என்பதே ஐடியா. போதாகுறைக்கு உனக்கு வேலை வாங்கிகொடுப்பதே என் தலையாய வேலை என்ற மாமாவின் வார்த்தை வேறு. அடேய் உனக்கு கிடைத்த வாய்ப்பு, கிடைக்காது எந்த நாய்க்கும் என்ற " தன்னம்பிக்கையோடு " இருக்கையில் அமர்திருந்தேன்.

இந்திய இரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி குறித்து அறிந்தவர்கள் மேலே படிக்கவும்.....
எனது படுக்கை மிடில் பெர்த், எனக்கு எதிரில் இருந்தவன் இரயில் கிளம்பியவுடன், பையை திறந்து ஏற் பில்லாவை எடுத்து ஊத தொடங்கினான். நானோ ஜன்னல் உலகத்தில் முழ்கி இருந்தேன், பூதலூர் இரயில் நிலையம் தாண்டிய உடன், "சார், உங்க பெர்த் நம்பர் என்ன என்றான் அருகில் இருந்தவன். நான் சொன்னதும் அவனிடம் பதிலேதும் இல்லை ( உண்மையில் கேள்வி எதுவும் இல்லை )
ஜன்னல் காட்சிகள் மங்க தொடங்கியது. இயற்கையின் எல்லா நிறங்களும் இருட்டில் தள்ளப்பட்டதால் வெளியில் பார்க்க எதுவும் இல்லை. எனது இருக்கை அருகில் நான்கே பேர். ஒருவன் ஏற் பில்லொவ் காரன், இன்னொருவன் பெர்த் நம்பர் களை சரிபார்தவன். மேலும் இருவர் வயதில் மூத்தவர். பழக்கதோஷத்தால் நான் அமர்திருந்தது ஜன்னல் இருக்கையில். எனக்கு எதிரில் இருந்த ஏற் பில்லொவ் காரன் கால் நீட்டி படுக்க, எனக்கு அருகில் இருந்தவன் மீண்டும் ஒரு முறை பெர்த் நம்பர் கேட்டான்.


எனக்கு இந்த முறை புரிந்துவிட்டது, மிடில் பெர்த் காரனுக்கு மிடில் seat தானே, ஜன்னல் இனிமேல் நமக்கு தேவை இல்லை, சரி toilet வரை சென்று வரலாம் என்று நினைத்து எழுந்தேன். திரும்பி வந்து பார்த்தால், பெர்த் நம்பர் கேட்டவனும் நீட்டி படுத்திருந்தான். ச்சே இரண்டு நிமிட தாமதத்தால் இருக்கையை இழந்துவிட்டேனே என்று வருத்தப்பட்டேன். திருச்சி நெருங்கிகொண்டிருந்தது, நானோ பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். இன்னொருவருடைய இருக்கை என்பதால் சிலநிமிடத்தில் எழுந்துவிட்டேன். இரயிலை சுற்றி பார்க்கலாம் என்று கெளம்பினேன்.

இரயில் பெட்டிகள் இணைந்திருந்தது அடுத்தடுத்த பெட்டிகளுக்கு செல்ல வழியும் இருந்தது. இதன் முடிவு வரை செல்லலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். திருவரும்பூர் தாண்டியது, திருச்சியும் வந்தது. பெட்டிபெட்டியாக நான் நடந்துகொண்டே இருந்தேன், வழியில் என்னை பார்த்தவர்கள் எல்லாம், தங்கள் வீட்டில் நுழைந்த நாயை போல என்னை பார்த்தார்கள். அருகில் இருந்த ஒருவனிடம் "இது எந்த கோச்?" என்று கேட்டேன். "எஸ் எட்டு" என்றான் அவன்.

இரயில் திருச்யில் நின்றது. எஸ் எட்டை விட்டு இறங்கிய நான், என்னுடைய கோச் ஆன எஸ் இரண்டை நோக்கி நடை மேடையில் நடக்க தொடங்கினேன். வெளியில் இருந்து பார்த்தேன் என்னுடைய இருக்கைக்கு அருகில் மேலும் மூன்று பேர் இருந்தனர். இந்த முறை மீண்டும் இருக்கையை இழக்கக்கூடாது என்ற முடிவோடு பெட்டிக்குள் நுழைந்தேன். போன வேகத்தில் எனது இருக்கையில் உட்கார்ந்தேன், அப்பாடா நிம்மதி ..உட்கந்தச்சு, அடுத்தது என்னுடைய bag , என்னுடைய bag? என்னுடைய bag காணவில்லை.....