Saturday, June 26, 2010

நீ ஏன் காதலிக்கிறாய்?....

நேற்று என்னுடைய நண்பன் அருண் என்னை பார்த்து கேட்ட கேள்வி இது.....



அருண் நன்கு படித்தவர், ஒருமணிநேரம் அவருடன் நேரம் செலவிட்டால், ஏதாவது ஒன்றை பற்றி நம்மை சிந்திக்க வைத்துவிடுவார். ஆனால் இது அவருடைய கேள்வி இல்லை. நேற்று முன்தினம், இரவு கல்லாறு கலகலப்பு முடிந்ததும், என்னை அருணுடைய வீட்டிற்கு தான் அழைத்து சென்றார்கள். அப்போது நான் தான் அருணிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். அருண் அப்போது எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் மறக்காமல் என்னை அதே கேள்வியை கேட்டிருக்கிறார்.



நாங்கள் அமர்ந்திருந்தது, கோவை பாலாஜி இன்டர்நேஷனல் ஹோட்டல் லை சார்ந்த மை பார் என்ற மது விடுதியிலே. " இந்த கேள்விக்கு ஒரு பேக் முடிந்தவுடன் பதில் சொல்லவா என்றேன் நான்.

தமிழ் கூறும் நல்லுலகில், சொந்த கருத்துகளை சொல்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய விஷயங்களை குறித்து பேசுவதே பல சங்கடங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் அருண் எதுவும் சொல்லவில்லை என்னுடைய பதிலை கேட்டு.



பதில் இது தான்....

மனித வழக்கை ஒரு வட்டம்.. குழந்தையாக இருந்த பொது, சுற்றமும் அது தரும் சுகமும் அலாதியானது. ஒருநாள் நாம் தினமும் சந்திக்கும் ஒருவரை பார்க்க முடிய வில்லை என்றால் வருத்தமாகிவிடும். தாயின் சத்தம் சிறுது நேரம் கேட்கவில்லை என்றாலும் அழுகை வந்து விடும். நம்மை பார்க்கும் எல்லாரும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்போம். இந்த வட்டம் பள்ளி செல்லும் பொது சற்றே விரிவடைகிறது ஆனால் சுற்றம் வேண்டும். கல்லூரியில் மாறுகிறது,

நம்முடைய நட்பு மேம்படுகிறது. நம்முடைய சுற்றம் நம்முடைய சுயத்தை பொருத்து அமைகிறது.
உடல் சுகம் தேடுகிறது, கலாச்சாரம் அதை தடுக்கிறது.

எதிர் பாலினம் , அதன் சுயநலம் , கவர்ச்சி நம்மை ஈர்க்கிறது. நட்பு என்ற பெயரில் நமது கலாச்சாரத்தினை பாதுகாக்க வேண்டியுள்ளது. காதல் என்ற பெயரில் நமது தேவைகளை சொல்லமுடிகிறது. முழு முதல் தேவையான உடலும், அகதேவையான நட்பும், காதல் என்ற ஒரு பெயர்சூட்டால் கலாசாரத்தின் சட்டதிட்டத்தில் சமரசம் செயப்படுகின்றதால் , காதல் ஒரு பாதுகாப்பான வடிகாலாக அனைவருக்கும் தோன்றுகிறது.

நானும் இதனால் தான் காதலிக்கிறேன்

Wednesday, June 23, 2010

செம்மொழியான தமிழ் மொழியே ........

செம்மொழி மாநாட்டின் கீதம்


http://www.youtube.com/watch?v=b_oU5ysFPfE


பிறபொற்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் ;
யாதும் ஊரே யாவரும் கேளிர் ..........

ஒன்பது நாழி, உடுப்பது இரண்டே;

உறைவிடம் என்பது ஒன்றே.

உழைத்து வாழ்ந்தோம் ....... உழைத்து வாழ்வோம் ..........

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் , நன் மொழியே நம் பொன் மொழியாம்.

போரை புறம் தள்ளி பொருளை போதுவாக்கவே ;

அமைதி வழி காட்டும் அன்பு மொழி,
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்........

செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம் .



ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும்,

ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே,
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும் ;

ஒதாபுகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குற ள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே

வளையாபதி, குண்டலகேசியும்...............

செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம்;

கம்ப நாட்டாள்வாரும் கவி அரசவை நல்லாளும்,
எம்மதமும் ஏற்றும் புகழ் என்றும்
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
தடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி


செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,

அகம் என்றும், புறம் என்றும், வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தம் இல்லது இருக்கின்ற இனிய மொழி
மோதி வளரும் ...
உயிரான உலக மொழி தம் மொழி நம் மொழி .. அதுவே .........

செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழி, தமிழ் மொழி. தமிழ் மொழி யா......... ஹ ........

செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம்,

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே

செம்மொழியான தமிழ் மொழியாம் .................................


பாடல் : டாக்டர். கலைஞர். மு கருணாநிதி

Monday, June 21, 2010

தீராததோ முதலாளித்துவம்???

சிகப்பு சகோதரர்கள் காலம் காலமாக சொல்லிகொண்டிருக்கும் , முதலாளித்துவம் இதுதானா என்று எனக்கு தெரியவில்லை .............

நானும் ஒரு தொழிலாளி தான்....... பல காலமாக என்னுடைய முதலாளி என்னதான் நினைக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல. இவர்கள் எல்லாம் நம்மை மனிதர்களாக தான் நினைகிரார்களா?

வெற்றிபெற கடுமையான உழைப்பு அவசியம்.... இது வெற்றிபெற்றுவிட்டதாக ஒருவர் நினைத்துகொள்ளும் பொது பிறர்க்கு தரும் உபதேசம். நிஜமாகவே இவர்கள் கடுமையான உழைப்பாளிகளா , அல்லது கடுமையான உழைப்பை சுரண்ட தெரிந்தவர்களா? என்பதே என் கேள்வி.
ஒரு நிறுவனத்தை ஒருவர் தொடங்கி தனது சொந்த முயற்சியால் அவர் வாழ்நாள் முடிவதற்குள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைதுகொள்வாறானால் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்ல?
சமுகத்தில் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதில் அல்லவே அவைகள் வெற்றி இருக்கிறது. நிஜமான விசுவாசமும் உண்மையான உழைப்பும் எந்த ஒரு தொழிலாளியிடமும் கிடையாது. ஆனால் உழைத்தால் தான் சோறு என்பதும், உண்மையாய் இருந்தால் தான் வேலை என்பதும் எல்லா தொழிலாளிக்கும் தெரியும் .

முதல் தலைமுறை முதலாளிகளுக்கு நிச்சயமாக தெரியும், உழைபவர்களை அழவைக்க கூடாது என்று. ஆனால் இரண்டாம் தலைமுறை (தரமான) முதலாளிகள் பணத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களது பணம் நேர்மையான உழைப்பால் வந்திருக்காது........ எனவே பயம்....எங்கே தானாய் வந்த காசு வீணாய் போய்விடுமோ என்று....
பாவம் இவர்கள் ... நிச்சயம் நிம்மதியாய் தூங்க மாட்டார்கள்

Tuesday, June 8, 2010

விளம்பரம்....

தொண்ணூறுகளின் நடுவில் தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம்...

மார்க்கெட்டில் காய்கறி வாங்கிகொண்டு இருப்பார் ஒருவர். வயது முப்பது இருக்கலாம். நல்ல நிறம், செம்மையான தேகம். படிய தலைவாரி இருப்பார். திடீர் என அவருக்கு இருமல் வந்து விடும்.

தொடர்ச்சியான இருமல். முழு தேகமும் காற்றடித்து சாயும் நாணல் போல சாய்ந்து எழும். முழு மார்க்கெட்டும் இவரை தான் பார்த்துகொண்டிருக்கும். அவருக்கு மிக அருகில் ஒரு ஒளி வெள்ளம்......

முட்டை வடிவ முகத்தில் மின்மினி பூச்சி போன்ற கண்களுடன் ஒரு அழகு தேவதை...
வெள்ளை நிற மார் கச்சை...... பரத நாட்டிய பெண்கள் அணிவது போல் கீழாடை, நகைகள்....... மெலிந்த தேகம் ........ வெளிர்நிற இடுப்பு (லோ ஹிப் ). கையில் ஒரு தாம்பாள தட்டில் நிவாரண் 90 ஷாஷைகள்.

அன்ன நடை நடந்து வந்து அவர் முன் நின்று
கையில் உள்ள தட்டை சற்றே உயர்த்த....
தின் என்ர அவள் மார்பை நோக்கிய படியே,
ஷாஷைகளில் ஒன்றை கையில் எடுத்து,
சட்டேன்று அதை கிழித்து , தொண்டையில் பட மருந்தை ஊற்றி.
பட்டென்று இருமல் நின்றதாக அவர் சொல்ல.....
யப்பாபா .............

என்ன ஒரு கலை சிந்தனை........
விளம்பரயுக்தி ......
தமிழர் மரபை அறிந்து கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு முடியும்.

எத்தனை பேர்
அந்த காலத்தில் மார்க்கெட்டில் இருமிகொண்டிருதார்களோ ......... ( லோ ஹிப் மங்கையை எதிர்பார்த்து )
இன்றும் எந்த ஒரு மளிகை கடையிலும் நிவாரண் 90 கிடைக்கும்
தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்த்து நில்லடா .........