அந்த வீடியோ வை பார்க்கும் போதெல்லாம், பாலனின் உடல் சிலிர்த்தது. தலையில் முண்டாசு அணிந்த அந்த உருவம், தொழிற்ச்சாலையின் பிரதான சேமிப்பு தொட்டியின் ஏணி மேல் ஏறி அந்த உருவம், கையில் இருந்த குடுவையில் இருந்த எதோ ஒரு திரவத்தை சேமிப்பு தொடியினுள் கொட்டிவிட்டு, கிழே இறங்கி சற்றே நொண்டியபடி நடந்து சென்றது. உருவம் என்று சொல்வானேன் யாரோ ஒரு ஆண்.
டிப்ளோமோ படித்துவிட்டு சர்வீஸ் எஞ்சினியர் பதவியில் இருந்து படிப்படியாக முன்னேறி, இன்று இந்த பன்னாட்டு குளிபான கம்பெனி யில் தயாரிப்பு நிர்வாகி என்ற பதிவிக்கு வர, பாலன் செய்து கொண்ட சமரசங்களும், சகித்துக்கொண்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. அத்தனையும் இரண்டு நாள் விடுப்பு எடுத்ததால் வீணாய் போய்விடுமோ என்ற அச்சம் பாலன் நெஞ்சில் வந்து விட்டது.
சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக சரக்கு தேவை என்பதால், போகி அன்று கூட தயரிப்பு வேலைகளை செய்யப்போவதாக முடிவு செய்த பின்,
பாலனின் மனைவி சீதா, கட்டாயப்படுத்தியதால் இரண்டு நாள் மேலிடத்தில் சொல்லிக்கொள்ளாமல் விடுப்பில் வீடு சென்றதால் வந்த வினை இந்த வீடியோ.
மொத்த குளிர்பானமும் சந்தைக்கு சென்றுவிட்டது. சரக்கை திரும்பபெருவது என்பது இயலாத காரியம். விடுப்பில் இருந்த இரண்டு நாள்களும் வேலை எவ்வாறு நடந்தது என்று பார்ப்பதற்காக தானியங்கி வீடியோ கேமரா பதிவுகளை பார்த்தபொழுது பாலன் மிரண்டு போனார். போகிப்பண்டிகையின் முதல் நாள் தயாரிப்பை சேமிப்பு தொட்டியில் வைத்துவிட்டு, போகியன்று குடுவைகளில் அடைத்து சந்தைக்கு அனுப்பசொல்லிவிட்டு, பாலன் வீட்டிற்கு சென்றார்.
அடுத்த மூன்று நாட்களும், பாலனின் கண்கள் போனை விட்டு அகலவில்லை, எந்த நிமிடம் விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து அழைப்பு வருமோ? மேலிடத்தில் தெரிந்து வேறு பிரச்சனைகள் வருமோ? என்று பாலன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். இணையம் மூலம் வேலைவாய்ப்பு தளங்களை பார்த்து, தனது தகுதிக்கு வேறு எங்காவது வேலை கிடைக்குமா என்றும் பார்த்தார். எதிர்ப்பார்த்தபடியே மேலிடத்தில் இருந்து பொன் முலம் தகவல் வந்தது. ஆனால் அவர் எதிர்ப்பார்க்காத தகவல் அது.
குறிப்பிட்ட நாளின் தயாரிப்பு, அதிவேகத்தில் விற்பனை ஆகுவதகவும், அந்த நாளின் தயாரிப்புமுறைகளை சரிபார்த்து அதையே நடைமுறை படுத்தும்படியும், மண்டல தலைவர் பாலனை கேட்டுக்கொண்டார். பாலனின் நிலை மேலும் சிக்கலானது. ஏன் என்றால், அந்த குறிப்பிட்ட நாள் போகிப்பண்டிகைக்கு முந்தய நாள்.
தரக்கட்டுப்பாடு துறைக்கு தகவல் சொன்னவுடன், அந்த குறிப்பிட்ட நாளின் தயாரிப்பில் நைட்ரோஜன் உப்புக்களின் அளவு சற்றே அதிகமாக இருந்ததாகவும், உபயோகமானதை தவிர மிச்சமாக சில குடுவைகள் அவர்களிடம் உள்ளதாகவும், வேண்டுமானால் மீண்டும் பரிசோதித்து பார்க்கலாமா என்றும் கேட்டார்கள். பாலன் பரிசோதனைகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மிச்சமான குடுவைகளில் சிலவற்றை எடுத்துவர ஆள் அனுப்பினார்.
கிடைத்தவற்றில் ஒன்றை எடுத்து, சிறிதளவு குடித்துப்பார்த்தார். தொண்டையை விட்டு இறங்கிய பின் நாக்கில் மிச்சமிருக்கும் சுவை புதிதாகவும் தனக்கு மிகவும் பரிச்சயமான வேறு ஒரு பானத்தின் ருசியாகவும் இருந்ததை கண்டுபிடித்தார். ஒரு நிம்மதி பெருமூச்சு பாலனிடமிருந்து வந்தது.
பாலனுடைய தாத்தா பாலனுக்கு கற்றுகொடுத்த பழக்கம் அது. பாலனுக்கு அந்த பழக்கத்தை விடமுடியவில்லை. அவனுக்கு இந்த பழக்கம் இருப்பது, கம்பெனி வாட்ச் மனுக்கு அவரது வீட்டில் சில எடுபிடி வேலை செய்யும் போது தெரிந்து விட்டது. பதினைந்து தினங்களுக்கு முன் அவன் இரவு வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்ததை தானியங்கி வீடியோ கமெராவில் தெரிந்து கொண்டு பாலன் திட்டினார். அதனால் தான், அவன் சேமிப்புத்தொட்டியில் இனம் தெரியாத திரவத்தை கலந்துவிட்டன.
விஷயத்தை புரிந்துகொண்ட பாலன் திருடனுக்கு தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டார். பாலனுக்கு இருந்த பழக்கம் , தன சிறுநீரை தானே குடிப்பது. வாட்ச் மென் , சேமிப்பு தொட்டில் கலந்தது , அவன் சிறுநீரை......