அவனுடைய காலை இப்படித்தான் விடிகிறது....
பழைய காதலி சொல்கிறாள்.... நான் நல்லா இருக்கேன் நீ ஒரு கல்யாணம் பண்ணு...
விழித்து கொள்கிறான்...
கைலி கலைந்து இருக்கிறது, இன்றும் தூக்கம் பத்தவில்லை.....
சுற்றி யாருமே இல்லை, சுதந்திரமாக முதலில் கழிவறை,
அவனது கழிவறை தனிமைகள் யாருக்குமே தெரிவதில்லை,
தன்னை போல் ஒருவனுக்கு ஒரு குருஞ்செய்தி..
இருவரும் இணைவது ஒரு சேட்டான் கடை டீ....
ஐந்து நிமிட தொலைகாட்சி செய்தி...மூன்று நிமிட முழு குளியல்,
மடிப்பில்லாமல் உடைகளை இஸ்திரீ போட்டு...இரண்டு நிமிடம் கழித்து அதை,
உடலில் போட்டு.... நேரம் பார்த்து துயரம் கொண்டு... காலணி மாட்டி,
கதவை சாத்தி.... கிளம்பும்போது.... அய்யோ...
பல் விளக்கவில்லையே என்று... பாய்ந்து கதவை திறந்து,
பட் என சட்டையை கழற்றி, சட் என்று பல் விளக்கி, மீண்டும் கிளம்பி,
வெளியே வந்த பின்..
நிஜமாகவே பழைய காதலி செல்பேசியில் அழைக்க...
அரைமணிநேரம்... பேசியதில் போனதே தெரியாமல்..
இன்னைக்கும் அலுவலகத்திற்கு
தாமதம்.....
என்ன வாழ்க்கை டா இது........
No comments:
Post a Comment