Tuesday, August 6, 2013

கழிவறை காவியம் - 2

 எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவன் பெயர் ராஜாராமன். நெடுங்கால பரிச்சயம். வயது நாற்பதை தாண்டிவிட்டது. பார்க்க வயது முப்பதை  தாண்டவில்லை எனும் தோற்றம். அசோக் நகர் பத்தாவது நிழற்ச்சாலையில் நான் தங்கி இருந்த பொது, என் வீட்டின் கழிவறையை அவசரமாக பயன்படுத்தும் ஒரு நிர்பந்தமான சூழ்நிலை அவனுக்கு. என் வீட்டு கழிவறை, மூன்றடி அகலமும் ஐந்தடி நீளமும் கொண்ட சிறிய சொர்க்கம். 

"0" வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில், மேற்கிந்திய கழிப்பான்,   2 தண்ணீர் குழாய் எல்லாம் ஒருங்கிணைந்த சிறிய கழிவறைக்குள் சென்றவன் அரைமணிநேரம் ஆகியும் வரவில்லை. கழிவறையை சொர்க்கமாக நினைக்கும் நான், கழிவறைக்குள் இருக்கும் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் காத்திருந்தேன். கூடுதலாக 15 நிமிடம் கழிந்தபின், நிச்சயம் எந்த ஒரு மனிதனும் இந்நேரத்திற்குள் கழித்து இருக்க கூடும் என நினைத்து, கதவை மெதுவாக தட்டினேன்.

சத்தமே இல்லை....... ராஜா என்று சன்னமாக கூப்பிட்டேன். பதில் இல்லை ..... என்னவோ எதோ என்று பதறி....... "ராஜா........ ராஜா ......" என்று கூவிக்கொண்டே வேகமாக கதவை தட்டினேன்... " இருடா " என்று மெல்லிய சத்தம் கதவின் உட்புறத்தில் இருந்து கேட்டது...... ச்சே என்ன   மனிதன் இவன் என்று நொந்துகொண்டு கழிவறை வாசலிலேயே காத்து கிடந்தேன்...... தாழ்பாள் திறக்கும் சத்தம்..... அப்பாடா என்று நினைத்து கதவருகில் சென்றேன்..... ஆர்வமிகுதியில் நானே கதவை திறக்க முற்பட்டேன்.... அங்கே நான் கண்டகாட்சி...........


ராஜா ....... ஒரு துண்டை மடியில் போட்டுக்கொண்டு...... ஒரு கையால் தண்ணீர் குழாயை அடைத்தும்.... மறு கையால் கதவை பிடித்துகொண்டு..... ஐயோ... ராஜா.... என்ன ஆச்சி என்று கேட்டேன் .... "tap உடைஞ்சிடுச்சு தண்ணி லீக் ஆக ஆரம்பிச்சிடுச்சு..... என்ன பண்றதுன்னு தெரியல...... அதான்.....  இவ்வளவு  நேரம் யோசிச்சேன்..... சேரி..... கைய வச்சி.... tap அடைச்சிட்டு..... துண்ட  மெல போட்டுக்கிட்டு...  உன்ன கூப்டேன்..... தண்ணி waste ஆக கூடாதுல"  என்று சொன்னான்.......நானும் அவனது சிக்கன நடவடிக்கைக்காக..... அவனை பாராட்டி.... அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து அவனுக்கு விடுதலை  கொடுத்தேன்...........

அப்போ இவளவு நேரம் இவன் கழிவரைல உக்காந்துகிட்டு...... உடஞ்சிபொன குழாய்ய .... ஒரு கையால அடைச்சிகிட்டு.... இன்னொரு கையால ..... எல்லா வேலையையும் முடிச்சிட்டு...... துண்ட  எடுத்து மடியில போட்டுட்டு... என்ன கொடும ........ இவன எல்லாம் என்ன பண்ண..........?  

No comments:

Post a Comment