இரு தினங்களுக்கு முன்பு, காரைக்கால் செல்ல பர்வீன் பஸ்சில் பயனபட்டுகொண்டிருந்தேன், எனக்கு முன்பு அமர்த்திருந்த இருவர் வேளாங்கண்ணி செல்வதாகவும், வழியில் ஒரு இடத்தில் அவர்களை இறக்கி விட வேண்டும் என்றும் துணை ஒட்டியை கேட்டார்கள். அவனோ "நான் துங்கிவிடுவேன், வண்டி ஸ்டோபிங்- ல மட்டும் தான் நிக்கும், வேற எங்கயும் நிறுத்த முடியாது என்றான். நான் சற்று கோபமடைந்து, தூங்கறதுக்கு தான் நீங்க வரிங்களா என்று கேட்டேன். அவன் கோபமடைந்து என்னுடன் வார்த்தை விளையாட்டை ஆரம்பித்தான்.
எங்கே கைகலப்பாக மாறிவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் அறை நாழிகையில் எல்லாம் முடிந்தது. காரணம் செல்லிடைபேசி.
அவனுக்கு ஒரு கால் வந்துவிட்டது. சளைத்தவனா? நான் என்னுடைய செல்லிடைபெசியை எடுத்து தமிழ் சேவை செய்யலாம் என்ற எண்ணத்துடன்.
ஒரு குறுஞ்செய்தியை சிலருக்கு அச்சிட்டு அனுப்பினேன். அது...
அவளை அருகில் பார்த்த பின்புதான் தெரிந்தது!
அழகாய் இருந்தது அவள் தாவணி என்று.......
இரவு பதினோரு மணியானாலும் என் நண்பன் புகழேந்தி பதில் அனுப்பிஇருந்தான். அது ....
தாவணியால் அவள் முகத்தை முடு !
தானாய் வரும் மூடு .......
இன்னொரு நண்பி போன் செய்து திட்டினாள்
சற்றும் மனம் கலங்காத நான், திரும்பவும் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் ... அதாவது...
செல்லரித்த கவிதைகளை;
சிற்றஞ்சலாக,
செல்லிடைபேசி மூலம் அனுப்பினால்;
செருப்பினால் அடிபட்டே;
சிவலோகம் ,
செல்வாய் என;
கடுப்படைந்து சொல்கிறாள் ,
கயல்விழி....
இதற்கு அவளிடம் பதில் இல்லை போலும் .......
அந்தநேரம் இன்னும் ஒரு கவிதை தோன்ற அதையும் அனைவருக்கும் அனுப்பினேன். அது....
நேரம் தவறிய ரயிலுக்காக;
ஈரம் இல்லா நாளில்,
பாரமான சுமையுடன் காத்திருந்தாலும்!
தூரம் நிற்கும் பெண்ணுருவம்;
நெஞ்சில் தூறல் வார்க்கும்.....
யாரும் பதில் அனுப்பவோ அல்லது போன் செய்து திட்டவோ இல்லை...
இதை எல்லாரும் ஒத்துக்கொள்கிரார்களோ?
தமிழ்ச்சேவை முடிந்தது.......
No comments:
Post a Comment