நேற்றிரவு நான் எழுதியவைகளை இங்கே தருகிறேன் ...... இவைகள் நிச்சயமாக இரவின் இரவல்களே.......
"சிந்திக்கும் வேளையெல்லாம்,
சந்தத்தின் தேன்துளிகள் ,
சந்தித்த காலங்களை;
எண்ணி தணியும் நீர் குமிழ்கள் ;
எண்ணி துணிக கருமம் - என
ஏன் சொன்னான் அந்த கவி,
கருமம் ;
எண்ணுவதற்கே சிலர்கில்லை துணிவு;
மன ஏக்கம் தணிவது எப்போது?"
"பண்ணிய பாவமேல்லாம்,
பலன் தருகிறதோ இப்போது?
பரதேசி என நான்,
புறம் நாடுவதில் தப்பேது?
"சிறகொடிந்த பறவையென ,
சிவனே என்றிருந்தாலும் ;
மலை மேல் குடில் போலா,
உன் மடி சேர்வது?
"கவிதாயினி உன் மேல் பித்தம் கொண்டே
கவி தாகங்கள் சொல்வேன் பெண்டே "
கொடிபோல மேல் சாயும் உன்னை - இடை
தூக்கி இச்சிட இன்பம் அல்லோ ?
நீ தாங்கும் பூக்கள் மலர்ந்தாட - என்
கரந்தன்னின் காரியங்கள் போதாதோ?
செவி கேட்கும் செய்தியெல்லாம் - நீ
உச்சியில் சப்திக்கும் என் பேரோ ?
உன் விழி எனை தீண்டும் சிலநேரம் - அது
இதய நச்சு நீக்கும் சவுக்காரம்
நான் இச்சித்தவைகளை மறைத்து - எனை
பச்சையாய் காட்டி கொடுத்தாய் என்னிடமே.
ஐயோ இவை யாவும் துச்சம் - என்னும்
சித்தம் என்னுள் இல்லையே பராபரா
வெட்கம் வெட்கம் வெட்கம் - காம
வேட்கை மீள்வது நரகம்.
"நித்தம் நினைபதுண்டு பெண்ணே - உன்னை
நேசிப்பது எதனால் என்று "
பட்டென கண்ணில் படும் - உன்
கூட்டின் வடிவங்களா?
மங்கையர் சிலர்க்கே வாய்க்கும் - விழி
வீச்சின் சிதறல்களா?
தூரத்திலும் நெருப்பாய் சுடும் - பல
வெப்ப பேச்சுகளா?
சாமத்தில் எனை சேரும் - நின்
சங்கம நுட்பங்களா?
இல்லை இல்லை இவை - யாவும்
என் வேட்கை தணிக்கும் குளிர் நீரா?
அறியேன் அறியேன் அறியேன்............
இரவின் தனிமை இன்னும் கிடைத்தால்....
இது போல் சிலவை இன்னும் இன்னும் ;
பதிவேறும்.........
No comments:
Post a Comment